பெரும் அலறல் சத்தம்.. கவனமாக இருங்க.. நிசார்கா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது என்ன?


  • மும்பை: நிசார்கா புயல் காரணமாக மும்பைவாசிகள் மிக பெரிய சத்தத்தை இன்று கேட்க போகிறார்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டு இருக்கிறார்.

    Recommended Video

    Nisarga Storm | நிசார்கா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது என்ன?
    Advertisement

    அரபிக் கடலில் உருவாகி தற்போது வேகமாக நகர்ந்து வரும் நிசார்கா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் இந்த புயலால் கடுமையாக பாதிக்கும். இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    மகாராஷ்டிரா கடல் பகுதியிலிருந்து 120 கி.மீ. தொலைவில் நிசார்கா புயலின் கண் உள்ளது. இந்த புயலால் மும்பையில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்கும்.

    Cyclone Nisarga: மும்பையின் ரத்னகிரியை நெருங்கும் புயலின் கண்.. மதியம் கரையை கடக்கும்

    தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்

    தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில், மகாராஷ்டிராவில் இருக்கும் அலிபாக் கடலில் தெற்கு பகுதியில் இந்த புயல் கரையை கடக்கும். காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் இந்த புயல் கரையை கடக்கும். மொத்தம் 2-3 மணி நேரம் இந்த கரையை கடக்கும் செயல் நடைபெறும். புயல் கரையை கடக்கும் போது அதன் வேகம் 90-100 கிமீ/ நேரம் என்ற அளவில் இருக்கும்.

    வேகம்

    காற்றின் வேகம் 110-120 கிமீ/ நேரம் வரை செல்ல வாய்ப்பு உள்ளது.இந்த புயல் மும்பைக்கு அருகே 1.30 மணிக்கு வரும். அப்போது மும்பையில் 70-80 கிமீ/ நேரம் வேகத்தில் செல்லும். காற்றின் வேகம் 100 கிமீ/நேரமாக இருக்கும். மும்பைக்கு அருகே இன்று மதியம் புயல் கண் பகுதி இருக்கும். இதனால் அங்கு அதிக வேகமாக காற்று வீசும். ஆனால் இந்த நிசார்கா புயல் 1948ல் மும்பையை தாக்கிய புயலை போல இருக்காது.

    மும்பை எப்படி

    1948 புயல் காரணமாக அலிபாக் பகுதியில் 160கிமீ/ நேரம் அளவுக்கு காற்று வீச்சு இருந்தது.ஜூஹூ பகுதியில் 151 கிமீ/ நேரம் அளவிற்கு காற்று வீச்சு இருந்தது. இந்த புயல் காரணமாக பெரிய அளவில் சத்தம் வரும். மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த சத்தம் வரும். 1940க்கு பின் பிறந்த மக்கள் முதல் முறையாக இப்படி ஒரு சத்தத்தை கேட்பார்கள். அதனால் கவனமாக இருங்கள், என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    பெரும் சத்தம்

    1948ல் மும்பையை பெரிய புயல் தாக்கியது. அதன்பின் அந்த அளவிற்கு புயல் இல்லை. தற்போது வந்திருக்கும் நிசார்கா அந்த வேகத்தில் இருக்காது. ஆனால் இந்த புயல் நகரத்தின் பெரும் பகுதியை தாக்குவதால் சேதம் அதிகமாக இருக்கும். புயல் காரணமாக மும்பையில் அதிக அளவில் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English Summary

    Nisarga Storm: Due to the cyclone, A huge howling sound will come says Tamilnadu Weatherman in his post.